கோவில்பட்டி செக்கடி தெருவில் தனியார் திருமண மண்டபத்தில் தபால் துறை சார்பில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு, அஞ்சல்துறை சேமிப்புகணக்குகள், செல்வமகள் சேமிப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு கணக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்மண்டல அஞ்சல் துறை இயக்குனர் பவன்குமார் சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு, தனது சொந்த செலவில் 400 குழந்தைகளுக்கு ரூ.250 வீதம் 1லட்ச ரூபாய் வழங்கி கணக்கினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். இதில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அமுதா, தாசில்தார் பரமசிவம், கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தகுமார், துணை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்கள் வசந்தசிந்து தேவி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.