Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் கேஸ் சிலிண்டரின் தொடர் விலை உயர்வை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்..

மதுரையில் கேஸ் சிலிண்டரின் தொடர் விலை உயர்வை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

மத்திய அரசே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறு! கொரானா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் மேலும் சிரழிக்காதே நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் கேஸ் சிலிண்டரின் தொடர் விலை உயர்வை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் டிசம்பர் 26 மாலை மாவட்ட தலைவி கதிஜா பீவி, தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சமீமா, வரவேற்புரை நிகழ்த்தினார்.

விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில செயலாளர் பாத்திமா கனி, சிறப்புரை நிகழ்த்தினார் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பேச்சாளர் பிலால் தீன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட துணை தலைவர் வழக்குரைஞர் ஜவஹர்,  காங்கிரஸ் கமிட்டி மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மதுரை மாவட்ட தலைவி சிராஜ் நிஷா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்..

இறுதியாக மாவட்ட துணை தலைவி அபிதா பேகம், நன்றியுரை நிகழ்த்தினார் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தால் பாதிப்புள்ளாகி இருக்கும் நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் பாரங்களைச் சுமக்கும் பெண்கள் ஆகியோரின் அவசியத் தேவைகளைக் கருத்தில்கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் மீது சுமத்தப்பட்டிருக்கும் 100 ரூபாய் விலையேற்றத்தை திரும்பப்பெற வேண்டும்.

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான விலையேற்றத்தை திரும்பப்பெறுவதன் வாயிலாக மட்டுமே மக்களின் சிரமங்களை குறைக்க இயலும் என்று கண்டன முழக்கமிட்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!