
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிகராக தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ள கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த சகோதரர் ஜஹுபர் அலி (சிங்கப்பூர் டிராவல்ஸ்) என்பவரின் புதல்வர் ஜாஹித் ரிபாயை கௌரவிக்கும் விதமாக கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக இன்று 27.12.2020 மாலை 5 மணியளவில் அல் மதரசத்துல் முஹம்மதியாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அல் மதரசத்துல் முஹம்மதியாவின் முதல்வர் ஜனாப். அஹமது ஹுசைன் ஆசிஃப் , வழக்கறிஞர் சட்டப்போராளி ஜனாப். சாலிஹ் ஹுசைன் மற்றும் டாக்டர். ராசிக்தீன் (திருப்புல்லாணி வட்டார மருத்துவர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கௌரவிப்பு நிகழ்ச்சியில் பலர் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.