
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை டிசம்பர் 23 முதல் 29 வரை தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வாரமாக கடைபிடித்து வருகிறது. இந்த ஏழு நாட்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்ச் சங்கங்களோடு இணைந்து பல தமிழ் விழிப்புணர்வு நிகழ்வுகளை தமிழ் வளர்ச்சித் துறை நடத்தி வருகிறது. அந்த வகையில் 26.12.2020 சனிக்கிழமை திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலக பணியாளர்களும், பொதிகைத் தமிழ்ச் சங்கத்தினரும் இணைந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் தமிழ் விழிப்புணர்வு ஒட்டுத் தாள்களை ஒட்டி, துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்களுக்குச் சென்று “அருந்தமிழில் அமையட்டும் அறிவிப்புப் பலகைகள் “என கேட்டுக்கொண்டனர்.
கூடவே துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். நிறுவன வாசல்களில் ஒட்டுத் தாள்களையும் ஒட்டி தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பணிகளை பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் பேரா, அகவை முதிர்ந்த தமிழறிஞர் சுப்பையா, திருக்குறள் முருகன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் அலுவலகப் பணியாளர்கள் சுப்புலட்சுமி, வீரலட்சுமி, செல்வம், ரஜினிபாபு ஆகியோர் திறம்படச் செய்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.