Home செய்திகள் தீனியா பள்ளி சார்பாக நடத்தப்பட்ட கீழக்கரை அளவிளான போட்டியில், பரிசுகளை குவித்த மதரசா மாணவர்கள்…

தீனியா பள்ளி சார்பாக நடத்தப்பட்ட கீழக்கரை அளவிளான போட்டியில், பரிசுகளை குவித்த மதரசா மாணவர்கள்…

by ஆசிரியர்

கீழக்கரை தீனியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க பேச்சு போட்டி மற்றும் மார்க்க கண்காட்சியில் கீழக்கரையில் 25 மதர்ஷாகளில் இருந்து 170 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவ மாணவிகள் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை முகமது சதக் ஹமீதா கலை கல்லூரி பள்ளி முதல்வர் ஜனாபா டாக்டர் A.K.நாதிரா பானு கமால் , கீழக்கரை டவுன்காஜி மெளலவி ஜனாப் A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன், மற்றும் விழா முன்னிலை பள்ளி தாளாளர் ஜனாப் முகம்மது அபுபக்கர் அல் அத்தீக், ஜனாப் S.M.N.மத்தின், ஜனாப் S.நூருல் அன்சாரி, ஜனாப் P.A.S.பல்லாக்கு தம்பி மற்றும் நிகழ்ச்சி நீதிபதிகள் முகமது இன்ஜினியரிங் காலேஜ் பேராசிரியர் ஜனாப் ஆசிப் மற்றும் பலர் கலந்து பரிசளித்து சிறப்பித்தது மிக சிறப்பு.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீழக்கரையில் மாணவ மாணவிகளுக்கு பத்தாண்டுகளுக்கு மேல் மார்க்க கல்வி கற்று கொடுத்த மதர்ஷா ஆலிம்களை கவுரவித்தது மற்றும் மதார்ஷா நிர்வாகிகள், தன்னார்வாக நிகழ்ச்சிக்கு வந்த பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் , நடுத்தெரு பள்ளி யஜமாத் தலைவர் மற்றும் மரியாதை நிமித்தமாக வந்த பலரை வரவேற்று அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு கொடுத்தது, பரிசளிப்பு விழாவை காண வந்த நூற்றுக்கு மேற்ப்பட்ட தாய்மார்கள் அணைவருக்கும் வாயிலில் அன்பாக பன்னீர் தெளித்து வரவேற்பளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்த தீனியா பள்ளி தாளாளர் மேலாளர் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் பல பெற்றோர்கள் பாராட்டினர்.

இப்போட்டிகளில் இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டு வரும் அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா மாணவர்கள் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளனர்.

அல் மத்ரஸத்துர் ராழியா – இஸ்லாமிய மாதிரி கண்காட்சி.. Senior category முஹம்மது இர்ஷாத், முஹம்மது அஹ்னாஃப் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். Junior category முஹம்மது பவாஸ் முதல் பரிசு.

பயான் போட்டி – Senior category முஹம்மது ஸஃப்வான் மூன்றாம் பரிசு.

கிராத் போட்டி – Junior category முஹம்மது முஆஸ், இரண்டாவது  பரிசு.

அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா

இஸ்லாமிய மாதிரி கண்காட்சி Senior category முஹம்து நதீம், அப்துல் மதீன்,ரிஃப்னாஸ் ஆகியோர் மூன்றாம் பரிசு.

கிராத் போட்டி – Senior category அல் ஃபர்தீன்ம, மூன்றாம் பரிசு.

மேலும் மத்ரஸா நிர்வாகிகளுக்கான விருதுகளை அல் மத்ரஸத்துர் ராழியாவின் தலைமை நிர்வாகி சல்மான் கான், அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யாவின் நிர்வாகி முஹம்மது தவ்ஹீத் ஜமாலி அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

நடுவராக பணியாற்றியமைக்காக இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி விருதினை பெற்றுக் கொண்டார்.

அதே போல் கீழக்கரை வடக்குத் தெரு சமூக தல அமைப்பின் (NASA) மேற்பார்வையில் நடைபெற்று வரும் மதரஸத்துல் முஹம்மதியா மாணவர்கள்  பல வெற்றி பரிசுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இம்மதரசா மாணவர்கள் கிராத் போட்டியில், முஹம்மது பஹீது முதல் இடத்தையும், பேச்சு போட்டியில் முஹம்மது ஹன்னான் இரண்டாவது இடத்தையும், இஸ்லாமிய கண்காட்சியில் அஹமது அப்துர் ரஹ்மான் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளை கவுரவிக்கும் விதமாக வழங்கிய பரிசை நாசா நிர்வாகி பஷீர் பெற்றுக் கொண்டார்.

இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொருளாளர் சல்மான் கூறுகையில் மத்ரஸா மாணவர்களையும், நிர்வாகிகளையும் ஊக்குவிக்கும் வகையில் இது மாதிரியான போட்டிகளை நடத்திய தீனியா மெட்ரிக் பள்ளியின் நிர்வாகத்திற்கு இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!