Home செய்திகள் உசிலம்பட்டியில் கூட்டு குடிநீர்திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் குடிநீர் வீணாகுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

உசிலம்பட்டியில் கூட்டு குடிநீர்திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் குடிநீர் வீணாகுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டியில் இருந்து உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர்திட்ட குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் போது ஆங்காங்கே கூட்டுக்குடிநீர்திட்ட குழாயை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.மேலும் குழாய் உடைப்பை; மெத்தனப் போக்கில் சரி செய்து செய்கின்றனர்.இந்நிலையில் இன்று உசிலம்பட்டி மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் முருகன் கோவில் அருகில் சாலையை அகலப்படுத்தும் பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர்; வீணாகி சாக்கடை நீரில் கலக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.இதனால் உசிலம்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுஇது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு குடிநீர் குழாய்க்கு சேதம் ஏற்படாத வகையில் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com