Home செய்திகள் கீழக்கரையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை..

கீழக்கரையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.14 – இராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கீழக்கரை நகரில் உள்ள குப்பை கிடங்கு, கடலில் கழிவு நீர் கலக்கும் இடங்கள், துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளை நேற்று ஆய்வு மேற்கொண்டார். கீழக்கரை நகரில் நிலவும் பொது பிரச்னைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

 

இதை தொடர்ந்து  சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையரின் உத்தரவு படி, ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி கீழக்கரை மீன் மார்க்கெட், சீதக்காதி சாலை ஓட்டல், பேக்கரி, டீக்கடை, மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயகுமார், கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர், கடலோர அமலாக்க பிரிவு சார்பு ஆய்வாளர் சித்தன், மீன்வளத்துறை மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். விற்பனைக்கு வைத்திருந்த 40 கிலோ அழுகிய மீன்களை கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தனர். அழுகிய மீன்களை விற்க முயன்ற வியாபாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். பள்ளி அருகே உள்ள கடைகளில் சோதனை செய்து சிகரெட், பீடி, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூ 1000 அபராதம் விதித்தனர். கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த  நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, மேற்பார்வையாளர் சக்தி, பாலமுருகன் ஆகியோர் ரூ.3,700 அபராதம் விதித்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com