பாலக்கோடு அருகே கணவனஹள்ளி கிராமத்தில் 3 மாதமாக குடிநீர் வராததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்…

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெலமாரணஅள்ளி ஊராட்சி கணவனஹள்ளி கிராமத்தில் கடந்த 3மாதமாக  ஒகேனக்கல் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் . பலமுறை புகார் மனு அளித்தும்  எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுப்பட்டனர்.

கிராமத்தில்  குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர் அவர் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார் கிராம மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காததால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சென்று அங்கும் இங்கும் ஓடி குடிநீர் எடுத்து வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே டேங்க் ஆப்ரேட்டரை மாற்றவும் முறையாக உடனடியாக கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி செல்லும் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. மாரண்டஹள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.