Home செய்திகள் பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா.

பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா.

by ஆசிரியர்

பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழாவை குத்துவிளக்கேற்றி மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் தொடங்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவää மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எச்.ரஹமத்துல்லா கான் அவர்கள் தலைமை வகித்தார்.

இக்கல்லூரி ஆண்டு விழாவில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் பேசியதாவது:- தமிழகம் வீறு பெற்று, உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால்ää உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வளர்ச்சி பெறுதல் வேண்டும் என்று முழங்கினார் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இன்று தமிழகத்தினை இந்தியாவின் அறிவுத் தலைநகரமாக மாற்றி, உயர்கல்வியில் ஒப்பற்ற வளர்ச்சியை ஏற்படுத்தித் தந்தவர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். ஒழுக்கம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் – தூய்மையாக நடந்து கொள்வதாகும். இவ்வொழுக்கமே, மனிதனை மனிதனாகவும், தெய்வமாகவும், உயர்த்தும் வன்மை பெற்றிருத்தலால் இது உயிரைக்காட்டிலும் உயர்வானது என்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் உயர்கல்வித்துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடுää சிறப்பான பணிகளை உயர்கல்வித்துறை செய்து வருகிறது. ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களும் ஒரு வரலாற்றினை படைத்து, தேசிய அளவில் சிறப்பு நிலையை அடையும் வகையில் திட்டங்களை வகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த நிதி நிலை அறிக்கையில் உயர்கல்விக்காக 2019-20 ஆம் ஆண்டிற்கு ரூ.4,584.21 கோடியை ஒதுக்கி சிறப்பு சேர்த்துள்ளார்கள். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை, அதாவது All India Survey of Higher Education வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் “தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது” என்று குறிப்பிடுகிறது.இப்பெருமையை பெருவதற்கு காரணம் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியிலும் மற்றும் அம்மா அவர்களின் வழி தொடரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆட்சிக் காலத்திலுமான 2011-2019 வரையிலான கல்வியாண்டில் கலை, பொறியியல், பல்வகை, உறுப்புகல்லூரிகள் என மொத்தம் 76 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுக்கடுக்காகப் புதிய, புதிய கல்லூரிகளைத் தொடங்கியதின் காரணமாக, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்திலும் தமிழ்நாடு உயர்வான நிலையைப் பெற்றுள்ளது.

இத்தனை சிறப்புக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த மாண்புமிகு அம்மா அவர்களையும், ஆசிரியர்களையும் மாணவர்களையும் இந்த நேரத்தில் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். இப்பட, காலத்திற்கு ஏற்ப புதுப்புது திட்டங்களை தீட்டி, ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படும் வகையில் உயர்கல்வியில் பல மாற்றங்களை தந்தவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். பாலக்கோடு கல்லூரி 2017-18 கல்வியாண்டில் 24.07.2017 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு,பொருளியல், இளமறிவியல், கணிதவியல், கணினி அறிவியல், இளவணிகவியல், இளவணிக நிர்வாகவியல் ஆகிய 8 இளநிலை பாடப்பிரிவுகளுடன் புதியதாக துவக்கப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் இருபாலர் கல்லூரி எனப் பெயர் கொண்ட இக்கல்லூரி பின்னர் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவின் நினைவாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இக்கல்லூரிக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்லூரி என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இக்கல்லூரியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்ற பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 285 மாணாக்கர்களுக்கு ரூ.4,78,029/-ம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இன 95 மாணாக்கர்களுக்கு சுமார் ரூ.4,30,195/-ம் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

2018-19 ஆம் கல்வியாண்டில் இக்கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன 275 மாணாக்கர்களுக்கும் சுமார் ரூ.3,74,738/-ம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இன 88 மாணாக்கர்களுக்கும் சுமார் ரூ.4,33,355/-ம் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. எண்னாம் எப்படியோ அப்படியே மனிதன் என்பார் காந்தியடிகள். எண்ணம் உயர்வானதாக இருக்கவேண்டும். ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்ää உயர் எண்ணங்கள் மலரும் சோலையாக இருக்க வேண்டும். ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்றார் திருவள்ளுவர். நினைப்பதெல்லாம் சிறப்பானதாக இருக்க வேண்டும். உயர்ந்த மனிதனாக, சிறந்த மனிதனாக வளர்ச்சி பெறும்போது எண்ணங்களும் உயர்வாக, சிறப்பாக இருக்கும். அப்போதுதான் உங்கள் செயல்களும் உயர்வானதாக சிறப்பானதாக இருக்கும். உங்கள் வாழ்வு மலர், எண்ணங்கள் மேம்பட, செயல்கள் சிறப்படைய, கலையும் இன்பமும் பெற்று உங்கள் வாழ்வு வளமடையவும், சிறப்படையவும் வாழ்த்துகிறேன். “இந்த உலகில் நாம் வாழ்கிறோம்! ஆனால் அறிவாளிகளுக்குள் இந்த உலகம் வாழ்கிறது. என்பதனை மாணாக்கர்கள் மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.

எல்லோரும் எல்லாம் தெரிந்துகொண்டு பிறப்பதில்லை, நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்?, எதற்கு?, எப்படி ? என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் ‘ஏன் பிறந்தோம்? எப்படி வாழ்கிறோம்? என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியதுதான் முக்கியம். அதுதான் கல்வியின் நோக்கம். தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் தெய்வத்தால் நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும் என்பது திருவள்ளுவரின் சிந்தனை. முயற்சியும் பயிற்சியும் தான் நம்மை மேம்படுத்தும். ‘ஊளக்கமது கைவிடேல்’, எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது என்று இந்தத் தருணத்தில் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்ளவேண்டும். ‘அறிவு’ என்பது வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கான கருவி மட்டுமல், ,அது வேலை கொடுப்பவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும்ää ஏன் நல்ல தலைவர்களாகவும் மாற்றும் வல்லமை கொண்டது, ‘அறிவு’ என்பது மாற்றம் தருவது, ‘அறிவு’ என்பது மகத்துவமானது ‘அறிவு’ என்பது தேடல் நிறைந்தது. இந்த உலகம் படித்தவர்களை மட்டும் விரும்புவதில்லை. படிப்புடன் கூடிய பண்பும் அவசியம். தனிமனித மதிப்பீடுகள் (Personal Values) உங்களின் ஆளுமையை உயர்த்திக் காட்டும். உங்களது கல்வி உங்களை மட்டுமல்லாது உங்களைச் சார்ந்தவர்களையும் உயர்த்த வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுள்ளவர்களாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கு பயிலும் மாணவ,மாணவிகள் அனைவருக்கும் இவ்வினிய நிகழ்ச்சியின் மூலம் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகிறேன்.

முதுகலை பாடபிரிவுகள் சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் முதுகலை பாடப்பிரிவுகள் தேவையான பாடப்பிரிவுகள் உருவாக்கப்படும். தருமபுரி பெரியார் பல்கலைகழக விரிவாக்க மையம் 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். 2019-20 ஆம் ஆண்டிற்கு பள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் ரூ.9.32 கோடி மதிப்பீட்டில் கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் அரசு பாலிடெக்னிக்காக மாற்றப்பட்டு அதற்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாய பெருமக்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 3 ஆண்டு காலம் கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் போது தேவைப்படும் தேவைப்படும் முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் பேசினார். இவ்விழாவில் சார் ஆட்சியர் திரு.ம.ப.சிவன் அருள், தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர்.மா.சகுந்தலா, பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர்.கு.இரவிச்சந்திரன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் திரு.தொ.மு.நாகராஜன், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.நா.பழனிவேலு, முன்னாள் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் திரு.கே.வி.அரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் திரு.கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர் திரு.பொன்னுவேல், திரு.சிவபிரகாசம், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் திரு.சங்கர், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர்.ஆ.சிவானந்தம், ஆசிரியர்கள, மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!