Home செய்திகள் பாலக்கோடு அருகே ரொட்டியூர் கிராமத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் குடிநீர் பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை..

பாலக்கோடு அருகே ரொட்டியூர் கிராமத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் குடிநீர் பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை..

by ஆசிரியர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியூர் கொட்டாய் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு கடந்த ஆறு மாதத்திற்க்கு முன்பு ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டினார்.

இதையாடுத்து அப்பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றது என்று எண்ணிய நிலையில் பணியில் தோய்வு ஏற்பட்டு கடந்த ஆறுமாதம் கடந்தும் பணிகள் முடிக்காமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், குடிநீர் குழாய் போதிய அளவில் அமைக்க வில்லை என்றும் கூடுதளாக நீர் குழாய் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த 10ஆண்டுகளில் இல்லாத அளவிற்க்கு இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு மற்றும் விவசாய கிணறுகள் வறண்டதால் குடிநீருக்காக 1கி.மீ தூரத்திற்க்கும், விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com