மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் 61 கிராம மக்களின் நீராதாரமான 58 கிராம கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அனைத்து கண்மாய்களுக்கும் செல்லப்பட்டு வருகின்றது.இதில் கடைமடை கண்மாய்களான சடச்சிபட்டி-பாப்பாபட்டி பெரிய கண்மாய்கள் வழியாக சின்னக்குளம் கண்மாய்க்கு செல்லும்.ஆனால் இப்பாதை ஆக்கிரமிப்பில் இருப்பதால் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை.மேலும் கடந்த முறை சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முயன்ற போது வைகை அணையில் நீர்மட்;டம் குறைந்ததால் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை.எனவே இந்த முறையாவது ஆக்கிரமிப்புகளை அகற்றி சடச்சிபட்டி உட்பட கடைமடை கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் உசிலம்பட்டி வட்டாச்சியர் சுரேஷிடம் மனு அளித்தனர்.மனுவை பெற்ற வட்டாச்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
உசிலை மோகன் 54
You must be logged in to post a comment.