Home செய்திகள் ஊரடங்கு நாளில் உசிலம்பட்டி நகரப்பகுதிகளில் 7நாட்களாக குடிநீா் விநியோகம் இல்லை. பொதுமக்கள் தவிப்பு

ஊரடங்கு நாளில் உசிலம்பட்டி நகரப்பகுதிகளில் 7நாட்களாக குடிநீா் விநியோகம் இல்லை. பொதுமக்கள் தவிப்பு

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான வீரபத்ர நாடார் தெரு, வி கேஎஸ் தெரு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தெருக்களில் கடந்த 1 வாரமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந் நாளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது போன்று குடிநீர் கிடைக்காமல் போனால் வீட்டை விட்டு வெளியேறாமல் குடிக்கத் தண்ணீாின்றி பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து உசிலம்பட்டி நகராட்சி அதிகாாிகளிடம் கேட்ட போது மெத்தனமான பதில்தான் பதிலாக கிடைத்தது.இந்த விஷயத்தில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலையிட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறைந்தபட்சம் டிராக்டா்கள் மூலமாவது குடிநீா் விநியோகம் செய்து பொதுமக்கள் தாகத்தை தீா்க்க முயல வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!