Home செய்திகள் தூத்துக்குடி : “தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை” – ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி : “தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை” – ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

by mohan

தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது, கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் (ஸ்மார்ட் கிச்சன்) மாற்றுத்திறனாளிகள் நடத்தும் “காபி ஷாப்” பை ஆட்சியர் திறந்து வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போதும், தங்களுக்குவேலை வாய்ப்பு அளிக்கும் படி பல்வேறு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வருகின்றன,அவர்கள் அனைவருக்கும் அரசு வேலை தருவது சாத்தியம் இல்லை.அவர்களை சுயதொழில் துவங்க ஊக்குவிக்கும் வகையில்  ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  மாற்றுத் திறனாளிகளால்  நடந்தப்படும் கேண்டீன் துவக்கப்பட்டுள்ளது. இதில், 15  மாற்றுத்திறனாளிகள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு,  தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது”.மாவட்டத்தில்  நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்துசெய்தியாளர்கள் கேட்ட போது, “தற்போது வரை  மாவட்டத்தில்  பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீருக்கு தேவையான, 300 க்யூசக்ஸ்  தண்ணீர் தடையின்றி கிடைக்கிறது”.”கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம், 23 பகுதிகளில் இருந்து எடுக்கப்படும்  தண்ணீர் மாவட்டத்தின், 90 சதவீத பகுதிகளின்  குடிநீர் தேவையை  பூர்த்தி செய்கிறது. அதே போல், மாவட்டத்தின், 6 தாலுகாக்களில் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்தும் வகையில் போர்கள் போடப்பட்டு, தண்ணீர் வழங்கப்பட உள்ளது.””இந்த ஆண்டு பருவ மழை பொழியவில்லை என்றாலும் இன்னும்  மூன்று மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பில் உள்ளது” என்றார்”மேலும் அடுத்த மாத இறுதியில், துாத்துக்குடியில் அரசு  சார்பில் புத்தக திருவிழா  நடத்தப்பட இருக்கிறது” என அவர் கூறினார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!