சாத்தூர் அருகே தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயம். ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி எஸ்வின் தெருவில் பாலமுருகன் என்பவரது வீட்டில் சட்ட விதவிதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இதே பகுதியைச் சார்ந்த பாலமுருகன் (30) சண்முகராஜ்(52) செல்வி (35) முத்துச்செல்வி (35) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகராஜ் வயது 52 என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் இந்த வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று தொடர்ந்து சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்