
உலக பிரசித்திபெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயிலில உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு , இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது . மதுரை மீனாட்சி சுந்தேரசுவரர் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி பிரசித்தி பெற்றது . கோயிலில் உள்ள 11 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி பச்சரிசி மாவில் கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம் .அதன்படி , இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்குறுணி விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அருகம்புல் மாலை , மலர் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் ஆயிரகணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது . நிகழ்வினை பக்தர்கள் வீட்டிலிருந்தே நேரலையில் காண கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.