Home செய்திகள் மதுரையில் 5 லட்சம் வாக்குகள் வைத்திருக்ககூடிய சவுராஷ்டிரா சமூகத்துக்கு தேர்தலில் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தர வேண்டும்‌ என ஒருங்கிணைப்பு தலைவர் ஓ.வி.ஆர்.ராஜ்குமார் பேட்டி

மதுரையில் 5 லட்சம் வாக்குகள் வைத்திருக்ககூடிய சவுராஷ்டிரா சமூகத்துக்கு தேர்தலில் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தர வேண்டும்‌ என ஒருங்கிணைப்பு தலைவர் ஓ.வி.ஆர்.ராஜ்குமார் பேட்டி

by mohan

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஸொராஷ்ட்ரா சபை அனைத்து சங்கத்தினர்கள் சேர்த்தல் மற்றும் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.தற்போதுள்ள நிர்வாகம் 2017ல் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்து இருப்பினும் இன்று வரை 6 ஆண்டுகளுக்கும் மேலாகிறது மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும் என்று சபை சட்டவிதிகள் இருக்கும் போது தற்போது உள்ள நிர்வாகம் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் சவுராஷ்டிரா சபையில் சமூக மக்கள் ஒரு லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும், உறுப்பினர்களை சேர்க்கும்போது உறுப்பினர் கட்டணம் ரூபாய் பத்து மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினர்.இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் நடத்த வேண்டும்.மதுரை சௌராஷ்ட்ரா சபையின் உறுப்பினர் சேர்க்கைக்கு சாதாரண உறுப்பினர் கட்டணம் சபை பைலாவில் உள்ள படி ரூ‌.10 கட்டணம் என்பதை மாற்றம் செய்யக் கூடாது.மதுரை சௌராஷ்ட்ரா சபையில் அனைத்து வகை உறுப்பினர்களும் எந்தவித நிபந்தனையும் இன்றி சேர்க்க வேண்டும்.2024 ஏப்ரல் மாதத்திற்குள் மதுரை சௌராஷ்டிரா சபை தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பின்னர் மதுரை சவுராஷ்டிரா சபையின் ஜீவிய கால கவுன்சிலர் ஓ.வி.ஆர்.ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது:சவுராஷ்டிரா சபையில் சமூக மக்கள் ஒரு லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இருக்கிறோம்..மதுரையில் 5 லட்சம் வாக்குகள் வைத்திருக்ககூடிய சவுராஷ்டிரா சமூகத்துக்கு வரக்கூடிய தேர்தலில் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!