
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 5-நாள் பேராசிரியர்கள் இணையவழியாக பங்குகொள்ளும் எதிர்கால ஆற்றலும் அதன் வளர்ச்சியும் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை துவங்கியது.வேலூர் தந்தைபெரியார் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோவை அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் இணையவழி மூலமாக இணைந்து பயிற்சி துவங்கியது.முதல்வர் அருளரசு துவக்கி வைத்தார். முதல்நாளில் புதுச்சேரி பல்கலைக்கழக பசுமை ஆற்றல் தொழிற்நுட்ப துறை தலைவர் ஏழுமலை சுற்றுச்சூழல் குறித்து பேசினார்.வேலூர் அரசு பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, பேராசிரியர்கள் பிரவீன்ராஜ், ரகீலா பிலால், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பயிற்சி பட்டறையை கல்லூரி பேராசிரியர் கலைவாசன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
கேஎம். வாரியார் வேலூர்.
You must be logged in to post a comment.