சாக்கடை கழிவுகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம்

ஆர்எஸ்.மங்கலம் பேரூராட்சி பரம்பை ரோடு, புலவர் அப்பா தர்ஹா எதிர்புறம் மற்றும் வாரச்சந்தையின் பின்புறம் உள்ள பகுதி கழிவுநீரால் நிரம்பி வழிகிறது.இதனை பலமுறை பேரூராட்சியில் கவனத்திற்கு சென்றும் தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர நிரந்தர நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.இப்பகுதியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வசிப்பதால் சாக்கடை கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு, மலேரியா டைபாய்டு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.எனவே அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி கழிவு நீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..