நிரம்பி வரும் கண்மாய்

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது நிலையூர் கால்வாய். சோழவந்தான் அருகில் உள்ள மேலக்கால் பகுதியில் வைகை ஆற்றில் இருந்து துவங்கும் நிலையூர் கால்வாய் இப்பகுதியில் உள்ள கொடிமங்கலம், கீழ்மாத்தூர், துவரிமான், மாடக்குளம், வடிவேல்கரை, விளாச்சேரி, தென்கால், நிலையூர், சூரக்குளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு செல்கிறது. இந்த நிலையில் தற்போது வைகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால். வைகை தண்ணீர் நிலையூர் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இப்பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்கள் நிரம்பி வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து வருகின்றது. இதனால் திருப்பரங்குன்றம் அஅருகிலுள்ள சூரக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கின்றது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..