
வேலூர் மாவட்டம் வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மாருதி சுசுகி காரில் நேற்றுதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம்புதூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்தனர்.அப்போது வேலுர் அருகே திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே பகல் 2 மணி அளவில்இவர்கள் சென்றுகொண்டு இருந்த காரின் டயர் வெடித்தது.திடீரென கார்டியர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஒடியது.அப்போத வேலூரை நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி மீது கார் மோதியதில்காரில் பயணம் செய்த கோமதி (26) முனியம்மாள்(60) பரிமளா (21) ராதிகா (45)மூர்த்தி (68) நிஷா(3 மாதம்)என 4 பெண்கள் ஒரு ஆண் 3 மாத பெண் குழந்தை என 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.மேலும் மாலதி (27) பூர்ணிமா (35) கலா(36) கார் ஓட்டுநர் சசிக்குமார்(25) குமரன் (3 மாத குழந்தை) என 5 பேர் படுகாயம் அடைந்து வேலுர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இதுகுறித்து கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். தப்பி ஓடிய லாரி ஓட்டுரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.ஆரணி கோட்டாட்சியர் கவிதா திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.இந்த சம்பவம் விருப்பாட்சிபுரம் மற்றும் முனியந்தாங்களில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது
You must be logged in to post a comment.