வேலூர் – சென்னை கடற்கரை ரயில் வரும் 2-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்விரைவு ரயிலாக மாற்றம்.

வேலூர்-சென்னை கடற்கரைக்கு பயணிகளின் கோரீக் கையை ஏற்று வரும் ஆகஸ்ட்-2-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பயணிகள் பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்அதன்படி அடுத்த 2-ம் தேதி முதல் வேலூர் கண்டோன்மெண்ட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு மெமூ பயணிகள் விரைவு ரயிலாக இயக்கப்பட உள்ளது.இது முன்பதிவில்லா ரயிலாக இயக்கப்படும்.சிறப்பு ரயிலாக செல்லும் இது காட்பாடி, திருவலம், முகுந்தராயபுரம், வாலாஜாரோடு, தலங்கைசோளிங்கர், அன்வர்தி கான்பேட்டை, சித்தேரி, அரக்கோணம், புளியமங்கலம், மோசூர், திருவலங்காடு,மணவூர், செஞ்சிபனப்பாக்கம், கடம்பத்தூர், ஏகாட்டூர்,திருவள்ளுவர், புட்லூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர்.அம்பத்தூர் வில்லிவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசென்னை கடற்கரை நிலையத்தை அடையும்.சாதாரண ரயில் கட்டணத்துடன் இயங்கி இந்த ரயில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தை பயணிகள் செலுத்த வேண்டும்.