
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் கரியாம்பட்டி , சிலுக்குவார்பட்டி, சங்கராபுரம், பழைய சிலுக்குவார்பட்டி, நடுப்பட்டி, மன்னாவாரதி, சென்னஞ் செட்டிபட்டி ,குப்பைபழனிபட்டி, சீரங்கம் பட்டி, கவிராயபுரம் உள்ளிட்ட சிலுக்குவார் பட்டி ஊராட்சியில் உள்ள 350 குடும்பங்களுக்கு சுமார் மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி சுமார் 35 லட்சம் மதிப்பில் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மத்திய அரசின் கழிவுநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவுநீர் மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டி களான உறிஞ்சு குழி அமைக்க பணி மத்திய அரசும் , மாநில அரசும் இணைந்து 350 வீடுகளுக்கும் உரிஞ்சு குழி பணி நேற்று தொடங்கப்பட்டது. பணியை நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணன் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து உரிஞ்சு குளி அமைக்க மானியத்துடன் பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளது இது மிகுந்த வரவேற்கத்தக்க வகையில் உள்ளது என தெரிவித்தனர். அப்போது உடன் சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன், ஊராட்சி ஒன்றியக் குழு மேற்பார்வையாளர்கள் மூர்த்தி திரு முருகன் மற்றும் ஒன்றிய சுகாதார மேற்பார்வையாளர் பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: நிலக்கோட்டை அருகே சங்கராபுரம் மேற்குப் பகுதியில் சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் திட்டத்தினை நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கிருஷ்ணன் பார்வையிட்ட போது எடுத்த படம்
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.