
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஓடையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100நாள் வேலை பணியாட்களை கொண்டு தூர்வாரும் பணிகள் வழக்கம்போல் நடைபெற்றது. இந்நிலையில் பணியாளர்கள் மும்முரமாக பணி செய்து கொண்டிருக்கும் போது ஓடையில் உள்ள முட்புதரில் மலைபாம்பு பதுங்கியிருந்ததை கண்டு அலறியடித்து கொண்டு உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வனச்சரக உதவி அலுவலர் பாஸ்கரபாண்டியன் உள்ளிட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர் சௌந்திரபாண்டியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பதுங்கியிருந்த மலைபாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5நிமிடங்களிலேயே 12அடி நீளமுள்ள மலைபாம்பை பத்திரமாக மீட்டு வனஅலுவலகத்திற்கு எடுத்துசென்றனர்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.