
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் வைகை அணையின் உபரிநீரை 58கிராம கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் வைகை அணையிலிருந்து 58கிராம கால்வாயில் தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்ககோரியும், அதற்கு நிரந்தர அரசாணை வழங்க கோரியும், அக்கட்சியின் மாநில தலைவர் நேதாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி 58கிராம பாசன விவசாய சங்கத்தினர், வழக்கறிஞர்கள், ஏராளமான விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
உசிலைசிந்தனியா
You must be logged in to post a comment.