உசிலம்பட்டி பிஎம்டி கல்லூரியில் இணையவழி மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பி.கே.எம் அறக்கட்டளை மற்றும் எக்விடாஸ் சார்பில் இணையவழி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன் பொருளாளர் வனராஜான் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பொன்ராம் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.கே.எம் அறக்கட்டளை தலைவர் புலவர் சின்னன் ஐயா முகாமில் துவக்கி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் ரவி மற்றும் எக்விடாஸ் சி.இ.ஒ ஜான் அலக்ஸ் ஆகியோர் முகாமின் சிறப்பு குறித்து பேசினர். விழாவில் பி.கே.எம் அறக்கட்டளை செயளாலர் ஜெயராஜ் பொருளாலர் ராஜா துனண தலைவர் ஜெயசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 15ற்கும் மேற்பட்ட கம்பெனிகள் வங்கிகள் மற்றும் பைனான்ஸ் கம்பெனி அதிகாரிகள் இணைளதள வழியாக நேர்கானல் நடத்தி வேலை வாய்ப்புகளை வழங்கினர். எக்விடாஸ் வங்கி துணை தலைவர் சத்தியநாராயணன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை எக்விடாஸ் வங்கியை சேர்ந்த குணசேகரன் பிரபு ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

உசிலைசிந்தனியா