முதல்வர் பாணியில் களத்தில் இறங்கிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி:

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில், மூர்த்தி வெற்றி பெற்றார். இதையடுத்து, அவருக்கு வணிகத்துறை மற்றும் பத்திரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், கிழக்கு தொகுதியில் உட்பட்ட அனைத்து பகுதியில் நன்றி தெரிவித்து பொதுமக்கள் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கிச் சென்றார். இன்று,மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிதம்பரம்பட்டி கிராமம் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அவர்களிடம் மனுக்கள் பெறச் சென்ற அமைச்சர் மூர்த்தி அங்கே, வயல்வெளியில் பணி மேற்கொண்ட விவசாய கூலி தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், விவசாய கூலி தொழிலாளிகளிடம் குறைகள் கேட்ட அமைச்சர் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அதிகாரிகளுக்கு உடனடியாக முதலமைச்சர்கள் பாணியில் உத்தரவிட்டார் .இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்