வேலூர் மாநகராட்சி சார்பில் சுடச்சுட பிரியாணிருசித்து சாப்பிட்ட கமிஷ்னர்.

வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் காந்திநகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டவளாகத்தில் நேற்று 2 -வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில் கமிஷ்னர், மாநகர நல அலுவலர், சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள், செய்தியாளர்கள் என பலருக்குநேற்று பகல் காந்திநகர் வளாகத்தில் சுடச்சுட மட்டன் பிரியாணி, நாட்டு கோழி சுக்காவுடன் பறிமாறப்பட்டது.மாநகராட்சி கமிஷ்னர் சங்கரன் பிரியாணியை ருசித்து சிறிதளவு சாப்பிட்டார்.பின்பு கமிஷ்னர் சங்கரன் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மட்டன் பிரியாணியை பறிமாறினார்.தலைட்சுமி மகளிர் சுயஉதவிகுழு மூலம் 30 கறவை மாடுகள், 60 நாட்டுக்கோழி மற்றும் வான்கோழி வளர்க்கப்பட்டு அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.பின்பு மாநகர நல அலுவலர் சித்ரசேனா, தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.உதவி ஆணையர்கள் வெங்கடேசன், பிரபு.செந்தில் சுகாதார அலுவலர்கள் பாலமுருகன், சிவக்குமார் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் இந்த பிரியாணி விருந்தில் கலந்துகொண்டனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..