கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக கல்வி கட்டண உதவி அறிவிப்பு..

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக, முகம்மது சதக் குழுமத்தின் அனைத்து கல்லூரிகளிலும் முஸ்லிம் சிறுபான்மை மாணவர்கள் மற்றும் ST/ SC மாணவர்களுக்கு கல்விக் கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படுகிறது.

பொறியியல் பிரிவு அனைத்துக்கும் ஒரு வருட கல்வி கட்டணம் (ரூ 85, 000க்கு) ரூ 35000  செலுத்தினால் போதும்(முதல் பட்டதாரிகளுக்கு). மற்றும் SC/ST மாணவர்கள் ரூ.10,000/. செலுத்தினால் போதும்.முஸ்லீம் சிறுபான்மை மாணவர்கள் ரூ.85,000 க்கு பதிலாக ரூ.50,000/. செலுத்தினால் போதும் (குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு)

மேலும் கலை கல்லூரிகள் (Arts College)  கல்விக் கட்டணம்(ரூ 25000 மற்றும் ரூ.20,000 க்கு)  ரூ.20,000 மற்றும் ரூ.15,000*செலுத்தினால் போதும்.

அதே போல் விடுதியில்  தங்கி படிப்பவர்களுக்கு விடுதிக் கட்டணம் மற்றும் கல்லூரி பஸ் கட்டணத்தில் சலுகை இல்லை.  இந்த சலுகைகளுக்குரிய விண்ணப்பத்திற்கு கீழக்கரை அனைத்து ஜமாஅத் (V.S. சாலை போஸ்ட் ஆபீஸ் அருகில்) அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும்.

விரைவில் இராமநாதபுரத்தில் சலுகை விண்ணப்பம் பெற அனைத்து ஜமாஅத் அலுவலகம் திறக்கப்பட உள்ளது.

ஆகையால், மாணவர்கள் சலுகைகளை பெற்று பயன் பெறும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேல் விபரங்களுக்கு 8870 137 017,  7845 786 925, 9942 214 187 ஆகிய அலைபேசிகளை தொடர்பு கொள்ளலாம்.