கொரோனா பரவலை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு ;அரசு பள்ளி மாணவி சாதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி எம்.சத்தியா மற்றும் அறிவியல் ஆசிரியர் தமிழ் கனி ஆகிய இருவரும் ரூபாய் நோட்டு மூலம் பரவும் எனவும் அச்சத்தைப் போக்கும் வண்ணம் கொரோனா கிருமி பரவலை தடுக்கும் பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார் .இந்தபெட்டியின் மூலம் ரூபாய் நோட்டுகளை வைத்தால் 7 வினாடியில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும். இதன் மூலம் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தை போகலாம். பிஸ்கட், காய்கறிகள், போன்ற பொருட்களையும் கிருமி இல்லாமல் சுத்தம் செய்யலாம் இந்தப் பெட்டியில் புற ஊதாக் கதிர் விளக்கு பயன்படுத்துவதால் அந்த விளக்கு கிருமிகளை கொல்வதில் சிறப்பாக செயல்படுகிறது மேலும் பெட்டியில் அனைத்து திசையிலும் ஒளி எதிரொளிப்பான் பொருத்தப்பட்டு ரூபாய் நோட்டில் அனைத்து திசை யிலும் ஒளிக்கதிர் பட்டு கிருமி கொல்லப்படுகின்றது, இந்த பெட்டி மூடிய நிலையில் இயங்கும் , திறந்த நிலையில் இயங்காததால் மிகவும் பாதுகாப்பானது. தமிழக அரசு இதனை ஆய்வு செய்து நம்பிக்கையளிக்கும் பட்சத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், வங்கிகள் வழங்கினால் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவல் தடுப்பதோடு அனைத்து வகை பரவலை தடுக்கலாம். இந்த கண்டுபிடிப்பிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் அண்ணாமலை அனைத்து உதவிகளையும் செய்திருந்தார்.இதுகுறித்து அறிவியல் ஆசிரியர் தமிழ் கனி கூறியதாவது; எங்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் அறிவியல் பாடத்தில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் . பல சிறிய சிறிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார்கள் மேலும் .கொரோனா பரவல் தடுக்கும் புதிய கருவி உருவாக்கியுள்ளார்கள். தமிழக அரசு இந்த கருவியை ஆய்வுசெய்து வணிக நிறுவனங்கள், வங்கிகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் எங்கள் அரசு பள்ளியில் போதிய அறிவியல் உபகரணங்கள் இல்லை கல்வித்துறை மூலம் அறிவியல் உபகரணங்கள் வழங்க வேண்டும் இதன் மூலம் மாணவ மாணவியர்கள் பல அரிய கண்டுபிடிப்பு மூலம் சாதனை புரிவார்கள். என்று தெரிவித்தார் பின்னர் மாணவி எம்.சத்தியா ஆசிரியர் தமிழ்கனி ஆகியோரை தலைமையாசிரியர் அண்ணாமலை பாராட்டி வாழ்த்தினார் உடன் ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, பிரபாகர் ,பொன்னன் , மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உடனிருந்தனர்