செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட கள்ளத்துப்பாக்கி யுடன் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று நபர்களை வனத்துறையினர் கைது செய்து ரூபாய் 75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காடுகள் இருந்து வருகின்றன இந்த காடுகளில் அதிக அளவில் புள்ளிமான் மயில் காட்டுப்பன்றி முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் இருந்து வருகின்றன இதனை சில சமூக விரோதிகள் வேட்டையாடி அதிக லாபத்திற்காக வெளி சந்தையில் விற்று வருகின்றனர் இந்நிலையில் செங்கம் அடுத்த பிஞ்சூர் வனப்பகுதி அருகே செங்கம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கள்ளத்துப்பாக்கி உடன் சுற்றித்திரிந்த மூன்று நபர்களை வனத்துறையினர் கைது செய்து வேட்டையாட பயன்படுத்தும் கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்தனர் அதன்பிறகு வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சரண்ராஜ் மற்றும் தண்டா பகுதியைச் சேர்ந்த பழனி என விசாரணையில் தெரியவந்தது இவர்களுக்கு கொரோனா காலமென்பதால் சிறை தண்டனை வழங்காமல் அத்துமீறி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட மாற்றுவதற்காக ஒரு நபருக்கு 25 ஆயிரம் முதல் சுமார் 75 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர் தொடர்ந்து வனப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்