வேலூர் மாநகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில்ஸ்ரீராம் நகர் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள காலி இடங்களில் மழைநீர் தேங்கி உள்ள இடத்தில் மரத்தூள் கலந்த ஆயில் பால் கொசு உற்பத்தியை தடுக்க போடப்பட்டது. மழைகாலங்களில் பொதுமக்கள் தாங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள இடத்தில் எதற்கும் உதவாத எண்ணெய் வகைகளை தேங்கி இருக்கும் நீர் மேல் தெளித்தால் எண்ணெய் படர்ந்து கொசுக்கள் அழிந்துவிடும் என்று கூறினார்.