
மதுரை பி.பி.குளம் பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்ததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரையில் பி..பி.. குளம் பகுதியில்இன்று காலை 8. 30 மணிக்கு மீனாட்சிபுரம், முல்லைநகர் ஆகிய பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி அப்பகுதியை உள்ள வீடு கடைகள் காலி செய்வதற்காக மின் இணைப்பைப் முதல் கட்ட நடவடிக்கையாக துண்டிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பீபீ குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீஸார் அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த முயன்றனர்.இதனால், மீனாட்சிபுரம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இருந்தபோதிலும், அப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.