செங்கத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமர் மோடிக்கு ஒரிஜினல் வடை பார்சல் அனுப்பும் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மோடிக்கு ஒர்ஜினல் வடை பார்சல் அனுப்பும் போராட்டம் மாவட்ட அமைப்பாளர் சர்தார் தலைமையில் நடைபெற்றது . அஸ்ரத்அலி, மகாவிஷ்ணு, ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயளாலர் வே. முத்தையன் கட்டண உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான 14 கோடி தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என்றும் தடுப்பூசி உற்பத்தியை பொதுத்துறை நிறுவனங்களில் போர்க்கால அடிப்படையில் உடனே தொடங்கிடவும்! உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கி அவர்கள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்! காலதாமதமின்றி செங்கல்பட்டு HLL தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்தனர் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.