
மதுரை மாடக்குளம் கிராமத்தில் உள்ள விளைநிலங்களை சுற்றிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட மயில்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை மதுரை பழங்காநத்தம் ஊர்க்காவலன் கோவில் அருகே மயில் ஒன்று சுற்றித் திரிந்த நிலையில் திடீரென அங்குள்ள மின்கம்பத்தில் சிக்கி மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்ததாக நினைத்த அக்கம்பக்கத்தினர் சுப்ரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வனத்துறையினர் பரிசோதனை செய்த பின்னர் மயில் உயிருடன் இருப்பது தெரியவர,தொடர்ந்து வனத்துறையினர் மயிலை மீட்டு சிகிச்சைக்காக மதுரை வனத்துறை சரக மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறது.சமீபகாலமாக மின்கம்பங்களில் பறவைகள் மற்றும் சிறுசிறு விலங்குகளால் அதிக அளவில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வரும்நிலையில்,மேலும் தேசிய பறவையான மயில் மின்சாரம் தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.