கீழக்கரை நகராட்சியின் அலட்சிய போக்கு… திறந்த நிலையில் வாறுகால் மூடிகள்….பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கழிவுநீர் வாறுகாலில் மூடி இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் தடுமாறி வாறுகாலில் விழுந்து விபத்து ஏற்படுகின்றன. அதேபோல் நடைபாதையில் செல்பவர்பளும் சில நேரங்களில் வாறுகாலில் விழுந்து பலத்த காயமடைகிறார்கள். இன்று (13/07/2021) ஒருவர் வாறுகாலில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

அதுமட்டுமின்றி வீடுகளில் இருக்கும் குப்பைகளை கொட்டுவதால் அடிக்கடி வாறுகாலில் அடைப்பு ஏற்படும் கழிவுநீர் வீதியில் ஓடி,  நோய் பரவும் அபாயம் கீழக்கரையில் ஏற்படுகிறது.  எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கீழக்கரையில் இருக்கும் அனைத்து கழிவுநீர் கால்வாய்க்கு மூடி போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.