நீண்ட தூர தடுப்புச்சுவர் அவதிப்படும் பொதுமக்கள் .

மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை முதல் கணேஷ் தியேட்டர் வரை நீண்டதூரம் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. சௌராஷ்ட்ரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அங்கு மட்டும் சற்று இடைவெளி விட்டிருக்கிறார்கள். இடையில் எங்கும் இடைவெளி இல்லை. இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலையும் மேலும், பொதுமக்கள் சாலை கடப்பதற்கு வழி இல்லாமல் வயதானவர்கள் சிறுவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று போக்குவரத்து நெரிசலில் தாண்டி மறுபக்கம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மேலும் ,போக்குவரத்து நெரிசல் மட்டுமல்ல பல விபத்துக்கள் நடக்கின்றன. இன்று காலை ஏழு மணி அளவில் எதிரும் புதிருமாக வந்த வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் கீழே விழுந்து அடிபட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே தெற்கு தொகுதி எம்எல்ஏ வந்து பார்த்து விட்டு சென்றார். காமராஜ் சாலை சற்று குறுகலான சாலை இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் பேருந்துகள் ஆட்டோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையில் தமிழ்நாடு சேம்பர் மற்றும் வங்கிகள் , பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .எனவே பெரிய விபத்துக்கள் நடப்பதற்கு முன்பு அந்த தடுப்புச் சுவர்களை ஆங்காங்கு எடுத்துவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்