
மதுரை மாட்டுத்தாவணி மீன்மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் திடீரென அதிரடிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கன்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட மீன்களை ஆய்வக உதவியாளர்கள் உதவியுடன் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது ரசாயன பொருட்கள் தழுவிய மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அகற்றினர்.அதிகாரிகள் ஆய்வு நடத்துவதை அறிந்த மீன் வியாபாரிகள் மாட்டுத்தாவணி மார்க்கெட் வளாகத்திற்குள் வாகனங்களை கொண்டுவராமல் வெளிப்பகுதியில் நிறுத்திவிட்டு தலைமறை வானார்கள்.இதுகுறித்து ஜெயராம பாண்டியன் கூறுகையில், மீன்களில் ரசாயன பொருட்கள் தடவி இருப்பதாக வந்த புகாரின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. கரிமேடு மீன் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 630 கிலோ எடைகொண்ட கெட்டுப்போன மீன்கள், ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டிலும் ஆய்வு நடைபெற்றது. மேலும் மீன்களை பரிசோதனை செய்வதற்கான ஆய்வக உதவியாளர் களும் உடன் வந்திருக்கிறார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு மீன்கள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதிகாரிகள் வருவதை கண்ட டிரைவர்கள் மார்க்கெட் வளாகத்திற்குள் வரவில்லை என்றார். மேலும் வரும் காலங்களிலும் சரியான முறையில் நல்ல மீன்களை விற்பனை செய்யாவிட்டால் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும். பொதுமக்களும் தாங்கள் வாங்கும் மீன்கள் நல்லதா, கெட்டதா என்பதை உறுதி செய்துவிட்டு அது கெட்டுப் போய் இருக்கும் பட்சத்தில் அதுகுறித்து 944404 2322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.என அவர் கூறினார். நேற்றுகாலையில் கரிமேடு மீன் மார்க்கெட்டில் 100 கிலோ அழகிய மீன்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது இதனடிப்படையிலேயே நேற்று நள்ளிரவு ரகசியமாக அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது…
இந்த ஆய்வின்போது மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.