வேலூர் அருகே பள்ளிகொண்டாவில் 360 கிலோ கஞ்சா பறிமுதல்2 பேர் கைது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை போதை தடுப்பு பிரிவு எஸ்.பி.சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை பள்ளிகொண்டா டோல்கேட் பகுதியில் எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில் வாகனங்களை தணிக்கை செய்தனர்.சந்தேகத்திற்கிடமான ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோதுமற்ற மூட்டைகளுக்கு இடையில் 150 சிறிய மூட்டைகளில் சுமார் 360 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது சம்பந்தமாக தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகன்(36) பாண்டியன்(48) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.