
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஒரவந்தவாடி கிராமத்தில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.திமுக ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு குளிர் உழைப்பால் குளிர்விப்பு மையத்தை திறந்து வைத்து பேசினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மானோகரன் புதுப்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் முனியப்பன் ஒரவந்தவாடி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமிராஜாமணி மற்றும் இந்திரலோகநாதன், ரவி மற்றும் மையத்தின் பொறுப்பாளர்களும் திமுக கட்சி மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.