ஸ்டேன் சுவாமி சிறைச்சாலை மரணம் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

ஸ்டேன் சுவாமி சிறைச்சாலை மரணம் ஜனநாயக படுகொலையே! சமூகச்செயற்பாட்டாளர்கள் மீது புனையப்படும் போலீ வழக்குகள் மனித உரிமை மீறல்கள் ஆகும்ஒன்றிய அரசு மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் மறுக்கிறது! ஸ்டேன் சுவாமிக்கு தேவைபடும் நேரத்தில் மருத்துவ உதவி மறுக்கப்பட்டது ஏன்!சமூக செயல்பாட்டாளர்கள் நடுநிலை பத்திரிக்கையாளர்களை சிறையில் அடைப்பதால் அரசு எதிர்ப்பு குரலை ஒடுக்கி விட முடியாது! என்ற முழக்கத்துடன்எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!மதுரை புனித மரியன்னைப் பேராலயம் முன்பாக நடைபெற்றதுமாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில்மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்மாவட்ட பேச்சாளர் பிலால் தீன் சிறப்புரை நிகழ்த்தினார்மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் நன்றியுரை நிகழ்த்தினார்.தமிழ் தேசிய முன்னணி நிர்வாகிகள்மீ. தா. பாண்டியன், ஆரோக்கியம் மேரி,தமிழ்தேச குடியரசு இயக்கம் மண்டல பொறுப்பாளர் மெய்யப்பன்,பாப்புலர் ஃப்ரண்ட்மதுரை மாவட்ட தலைவர் அபுதாஹீர்,மைக்கேல் பிரிட்டோ,அருட் தந்தைஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.யாகப்பாநகர் கிளை தலைவர் பாஷா, வடக்கு தொகுதி பொருளாளர் செந்தில், செயலாளர் பிலால் தீன், மத்திய தொகுதி செயலாளர் பாபுஜி, ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்