35
இராஜபாளையம் பிஏசிஆர் சாலை பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் ராஜபாளையம் வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் இப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புக்களை முறையாக அகற்றியும், நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், மேலும் மேம்பால பணிகள் விரைந்து முடிப்பதன் காரணமாக நகரிலிருந்து சத்திரப்பட்டி செல்லும் பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுற்றி செல்வது குறையும் என அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து பணிகளை விரைந்து முடிக்க சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.