பெட்ரோல்,டீசல் விலை உயர்வு;ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் நெல்லையில் ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் நெல்லையில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு K S ரசூல் மைதின் தலைமை தாங்கினார். மாநில தலைமை கழக பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ கண்டன உரையாற்றினார். துணை தலைவர் ஜாவீத்,மாவட்ட துணைச் செயலாளர்கள் A.காஜா,நவாஸ்,கம்புகடை ரசூல்,பெஸ்ட் ரசூல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் யூசுப் சுல்தான்,இளைஞரனி செயலாளர் ரியாஸ்,தொண்டரனி சம்சு,ஊடக அணி பொருளாளர் செய்யது, I P P பொருளாளர் ஞானியார்,வழக்கறிஞர் முகம்மது ஹூசேன், டவுண் நகர தலைவர் கோல்டன் காஜா,பேட்டை நகர தலைவர் ராஜா,மேலப்பாளையம் பகுதி செயலாளர் A R பாஷா,ஏர்வாடி பேரூர் தலைவர் அன்வர்,கரிக்காத் தோப்பு தலைவர் சதாம்,துலுக்கர்ப்பட்டி கிளை தலைவர் இஸ்மாயில்,வள்ளியூர் கிளைத் தலைவர் அப்துல் காதர்,ஆத்தங்கரை பள்ளிவாசல் கிளை தலைவர் மன்சூர்,வீரவநல்லூர் அப்துல் ஜங்ஷன் கிளைத் தலைவர் அப்துல் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி,தமுமுக தொண்டர்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். இறுதியாக மேலப்பாளையம் பகுதி தலைவர் தேயிலை மைதின் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..