இராஜபாளையத்தில் ஊரடங்கால் பாதித்த போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சிஐடியு தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானம் பகுதியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் விரோத போக்கால் அழிந்து வரும் மோட்டார் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைத்து ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் எனவும், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற பெற வேண்டுமெனவும், டோல்கேட் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் கொரோணா ஊரடங்கால் பாதித்த போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கார், லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி சாலை போக்குவரத்து தொழிலை பாதுகாக்க அரசுகள் முன்வர வேண்டுமென முழக்கமிட்டனர்.

..செய்தியாளர் வி காளமேகம்