“இளைய தலைமுறையினர் பார்வையில் பாரதி” இணையவழி உரையரங்கம்; கவிஞர் பேரா அழைப்பு..

மகாகவி பாரதியின் படைப்புகளை இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்,கவியரங்கம் மற்றும் போட்டிகளை நடத்திவரும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இப்போது நெல்லை அரசு அருங்காட்சியத்தோடு இணைந்து கடந்த மே மாதம் முதல் வாரந்தோறும் உரையரங்கம் என்ற நிகழ்ச்சியை “இளைய தலைமுறையினர் பார்வையில் மகாகவி பாரதி ” என்ற தலைப்பில் நடத்திவருகிறது. இந்நிகழ்வில் மகாகவி பாரதியின் கவிதைகள்,கட்டுரைகள்,சிறுகதைகள் குறித்து பிரபல பேச்சாளர் ஒருவரும்,இளம் பேச்சாளர் ஒருவரும் உரை நிகழ்த்தி வருகிறார்கள். இணையவழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியின் எட்டாவது வார நிகழ்ச்சி ஜூலை 07 புதன்கிழமை இன்று மாலை 5.00 மணிக்கு நடக்க உள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க உரையாளராக பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி மாணவர் சூர்யா உரையாற்றுகிறார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை வழங்குகிறார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா,நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நிகழ்ச்சியை வழி நடத்துகின்றனர். ஜூம் செயலியில் கூட்ட அடையாள எண் : 874 0995 990, நுழைவு எண்:333543 எனற வழியாக பாரதி அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாரந்தோறும் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பிக்குமாறு பொதிகைத் தமிழ்ச் சங்கத்தலைவர்,தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்