Home செய்திகள் “ஓட்டு கேட்டு வராதீங்க”; ஊர் பொதுமக்களால் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு..

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமான திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து வருகின்றனர். இந்நிலையில் சுரண்டை அருகே “ஓட்டு கேட்டு வராதீங்க” என்று பொதுமக்களால் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கலில் “ஓட்டு கேட்டு வராதீங்க” என்ற பேனர் ஒன்று பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ளது. அதில், மேலக் கலங்கல் பகுதி தெருக்களில் வாறுகால் இல்லாததாலும், முறையாக பராமரிக்காததாலும், மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு நடக்கவே சிரமமாக இருப்பதாகவும்,இதன் மூலம் நோய் பரவும் அபாயத்தில் வாழ்ந்து வருவதாகவும், அதிலும் ஆர்சி பள்ளி தெருவில் எப்போதும் நடக்க முடியாத அளவிற்கு தெருவில் சாக்கடை உள்ளதாகவும், ஊரின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட வாறுகாலில் தெற்கு பகுதியில் வாறுகால் இல்லாததுடன் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்படுவதாகவும், கீழக்கலங்கல் செல்லும் சாலையில் உள்ள வாறுகால் பாலம் நடுப்பகுதி சேதமடைந்து வாகனங்கள் சிரமத்துடன் செல்வதாகவும் கூறி ஆர்சி பள்ளி தெருவை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தராததால் நோட்டாவுக்கு வாக்களிக்க இருப்பதாகவும், ஆகவே வேட்பாளர்கள் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என்று பேனர் வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் மட்டும் விதவிதமான வாக்குறுதிகளை அளிப்பதும், தேர்தல் முடிந்தவுடன் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தராமல் இருப்பதும் இப்பகுதி மக்கள் இந்த முடிவுக்கு வரும் நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com