Home செய்திகள் செங்கம் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் முழுவதையும் 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவேற்றி தருவேன்-தேமுதிக வேட்பாளர் எஸ்.அன்பு உறுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனித்தொகுதியில் கேப்டன் அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் அன்பு போட்டியிடுகிறார் இதனையொட்டி செங்கம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே தேமுதிக மற்றும் ஆமா முக உள்ளிட்ட தோழமை கட்சி அலுவலகம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.நேரு தலைமையில் திறக்கப்பட்டது இதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டம் கட்சி அலுவலகம் எதிரே பிரமாண்டமாக நடைபெற்றது இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆமா முக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கம் பரந்தாமன் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஐயம்பாளையம் சிவசங்கர் பொது குழு உறுப்பினர் சாபுசன்முகம் மாவட்டகேப்டன் மன்ற செயலாளர் அகரம் குமார் தேமுதிக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜேசிபி சங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தண்டராம்பட்டு கிழக்கு ஒன்ரிய செயலாளர் திருப்பதி மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மற்றும் நகர செயலாளர் ஏ பி எஸ் அசோக்குமார் அமமுக நகர செயலாளர்கள் சரவணன் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர் இந்நிகழ்ச்சியில் குயிலம் சிவா கரிப்பூர் சேட்டு நன்றியுரை ராமமூர்த்தி மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் தொண்டர்கள் தோழமை கட்சி நிர்வாகிகள் அமமுக அனைத்து கிளை செயலாளர்கள் திரளாக கலந்துகொண்டு செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் செங்கம் தனி தொகுதி வேட்பாளர் அன்பு செங்கம் பகுதியில் உள்ள பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் முழுவதையும் 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவேற்றி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெண்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக சட்டமன்றத்தில் குரல் கொடுத்து தொழிற்சாலை அமைத்திடவும் ஒவ்வொரு ஏழை குடும்பத்திலும் வறுமையை போக்கிடவும் கேப்டன் அவர்களின் ஆணைக்கிணங்க பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி செங்கம் பகுதியை வளமான பகுதியாக மாற்றிட அயராமல் பாடுபடுவேன் என வேட்பாளர் உறுதியளித்தார் தேமுதிகவினர் மற்றும் அமமுக வினர் தோழமை கட்சியினர் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வு எதிர்க்கட்சி இடையே பெரும் தோல்வி பயத்தை ஏற்படுத்தியது என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com