
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் நேற்று ஆண் பிணம் கிடப்பதாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று தீவிர விசாரணை செய்தபோது கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார்(33) என தெரியவந்தது. ஊத்தங்கரை அடுத்த ஜோதிநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விக்டோரியா என்ற மனைவியும் ஒரு மகள், மகன் உள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கடத்தி சென்று கை, கால்களை கட்டிப்போட்டு அடித்து கொலை செய்துவிட்டு உடலை வாகனத்தில் எடுத்து சென்று திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பங்களாமேடு பகுதியில் சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
கேஎம். வாரியார்
You must be logged in to post a comment.