Home செய்திகள் மனித நேயம் அற்ற மனிதன் நடமாடும் பிணத்திற்கு சமம் என மனித நேய வார விழாவில் திண்டுக்கல் சரக டி. ஐ.ஜி. பேச்சு

மனித நேயம் அற்ற மனிதன் நடமாடும் பிணத்திற்கு சமம் என மனித நேய வார விழாவில் திண்டுக்கல் சரக டி. ஐ.ஜி. பேச்சு

by mohan

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எஸ். தும்மலப்பட்டியில் திண்டுக்கல் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நடத்தும் மனித நேய வார விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி கலந்து கொண்டார். விழாவில் டி.ஐ.ஜி பேசியபோது மனித நேய வார விழா மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற பெரிய நகரங்களில் தான் நடத்தப்பட வேண்டும், இன்றைக்கு கிராமங்களில் மட்டுமே மனித நேயம் என்பது இருக்கிறது. கிராம மனிதர்கள் தான் மனித நேயத்தோடு கட்டுப்பாட்டோடு கண்ணியத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள். அதற்கு முன்னுதாரணமாக தான் இதுபோன்ற மனித நேய வார விழா கிராமப்புறங்களில் நடத்த காவல் துறை சார்பாக முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு சக மனிதர்களை மனிதநேயத்தோடு நேசிக்க மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சக மனிதர்களோடு மனிதநேயத்தோடு பழகாத மனிதர் நடமாடும் பிணத்திற்கு சமம் எனவும், அன்பால் மட்டுமே அனைத்து நிலையையும் அடைய முடியும். இன்றைய சூழ்நிலையில் திண்டுக்கல் சரகத்திற்கு உட்பட்டு போலீசார் உட்பட்ட அனைத்து காவலர்களும் மனித நேயத்தோடு, அன்போடு இருக்கவும் பழகிக்கொண்டு வருகிறார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கிராமத்திலுள்ள நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com