Home செய்திகள் வாஸன் கண் மருத்துவ மனையில் அதி நவீன கான்டூரா லேசர் சிகிச்சை தொடக்கம்..

வாஸன் கண் மருத்துவ மனையில் அதி நவீன கான்டூரா லேசர் சிகிச்சை தொடக்கம்..

by Askar

வாஸன் கண் மருத்துவமனையில் அதி நவீன கான்டூரா லேசர் சிகிச்சை தொடக்கம்..

வாஸன் கண் மருத்துவமனை குரோம்பேட்டையில் அதிநவீனகருவிகளுடன்பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது தற்போது புதிய டெக்னாலஜியில் அதிநவீனமான கான்டூரா லேசர் சிகிச்சை அறிமுகம் செய்யப்படுவதாக கண் அறுவை சிகிச்சை டாக்டர்.P.B. கௌசிக் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது; இன்றைய விஞ்ஞான காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தக்கூடிய முக்கியமான சாதனங்களான செல்போன், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை ஒவ்வொருவரும் காண வேண்டிய அவசியத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாணவ மாணவியரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாலும்,பார்த்து வருவதாலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கிட்ட பார்வையும் தூரப்பார்வையும்: கண்களும் ஒரு கேமராவை போன்ற சாதனம் தான். நாம் பார்க்கும் பொருட்களின் வடிவமும் உருவமும் கண்ணில் உள்ள கருவிழி வழியாக விழித்திரையில்துல்லியமாக குவிந்தால் அது சரியான பார்வையாகும் விழித்திரையில் சரியாகக் குவியாமல் விழித்திரைக்கு சற்று முன்புறமாக குவிந்தால் பார்வை குறைபாடு ஏற்படும் இதனை கிட்டப்பார்வை என்றும் விழித்திரைக்கு பின்புறமாக குவிந்தாலும் பார்வை குறைபாடு ஏற்படும் இதனை தூரப்பார்வை என்றும் கூறப்படுகிறது என்று கூறினார்.

நெல்சன்- சென்னை

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com