Home செய்திகள் சிறுபான்மை மக்களுக்கு கல்லறை, கபர்ஸ்தானம் நிலம்!-தமிழ்நாடு அரசுக்கு டாஸ் மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி தெரிவித்து அறிக்கை..

சிறுபான்மை மக்களுக்கு கல்லறை, கபர்ஸ்தானம் நிலம்!-தமிழ்நாடு அரசுக்கு டாஸ் மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி தெரிவித்து அறிக்கை..

by Askar

சிறுபான்மை மக்களுக்கு கல்லறை, கபர்ஸ்தானம் நிலம்!-தமிழ்நாடு அரசுக்கு டாஸ் மாநில செயலாளர் ஜெபசிங் நன்றி தெரிவித்து அறிக்கை..

தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவர்கள் , முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு போதுமான இடங்கள் இல்லாமல் சிறுபான்மை மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர். கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கல்லறை, கபர்ஸ்தானங்கள் அமைக்க இடம் வழங்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் பல ஆண்டு காலமாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி அன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டத்தில் கிறித்தவர்கள் கல்லறைத் தோட்டங்கள் முஸ்லிம்களுக்கு கபர்ஸ்தான் இல்லாத மாவட்ட தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாநகராட்சி, நகராட்சி சார்பில் கல்லறைதோட்டம், கபர்ஸ்தான் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்டது.

சிறுபான்மை மக்களின் நீண்ட நாள் முக்கியமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து அரசானை 3.1.24 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து கோரிக்கையையும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தரமாக சான்றிதழ் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த அரசானை மூலம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் மாணவ / மாணவிகளின் கல்வி வாய்ப்புக்கும் மிகப் பெரிய பயனாக இருக்கும்.

சிறுபான்மை மக்களின் மிக முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றி அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கம் (டாஸ்) சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாநில செயலாளர் ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!